Categories
சினிமா தமிழ் சினிமா

‘கோபத்தை மட்டுமே பார்த்து வளர்ந்திருக்கிறேன்’… கன்பெக்சன் அறையில் கண்கலங்கிய பாலா… வெளியான ஃபர்ஸ்ட் புரோமோ …!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து இதுவரை, பாலாஜி யாரிடமாவது ஆவேசமாக பேசி விட்டு கமல்ஹாசன் எபிசோடின் போது மன்னிப்பு கேட்பார். இது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்கள் ஆரியுடன் ஆவேசமாக மோதிய பாலாஜி இன்று  கலங்குவது போல் புரோமோ வெளியாகி உள்ளது . இன்றைய முதல் புரோமோவில் கன்பெக்ஷன் அறையில் பேசிய பாலாஜி ‘கோபம் என்னுடைய இயற்கை. கோபத்தை மட்டுமே பார்த்து வளர்ந்திருக்கிறேன் . அது தவறு எது தவறு என சொல்வதற்கு என் வாழ்க்கையில் யாருமே இல்லை .

மக்களும் சரி ‌ மக்களின் பிரதிநிதியான கமல்ஹாசனும் சரி சுட்டிக்காட்டும் போது தான் நான் செய்தது உச்சகட்ட மிஸ்டேக் என எனக்கு புரிகிறது . அதை சரி செய்ய எனக்கு தெரியும் .எவ்வளவு தான் நான் கீழே விழுந்தாலும் மீண்டும் எழுவது என்னுடைய இயற்கை .எவ்வளவு கீழே விழுந்தாலும் மீண்டும் உச்சத்திற்கு வருவேன்’ என கண்கலங்கி கூறுகிறார் . இதையடுத்து கமல்ஹாசன் பாலாஜியை பார்த்து ஓகே என்பது போல் இருகைகளையும் உயர்த்துகிறார் . இதைப்பார்த்த ரசிகர்கள் இது உண்மையான மன்னிப்பா? அல்லது நடிப்பா? என குழப்பத்தில் உள்ளனர் .

Categories

Tech |