Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோபத்தில் சென்ற மனைவி…. மர்ம கும்பலின் வெறிச்செயல்…. திண்டுகல்லில் பரபரப்பு…!!

மர்மகும்பலை சேர்ந்தவர்கள் விவசாயியை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெருமாள்புதூரில் விவசாயியான கருப்பசாமி என்பவர் தனது மனைவி மீனாட்சி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மீனாட்சி தனது கணவரிடம் கோபித்து கொண்டு குழந்தைகளுடன் அதே பகுதியில் இருக்கும் அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் வீட்டில் கருப்பசாமி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.

அந்த சமயம் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் திடீரென வீட்டிற்குள் நுழைந்து கருப்பசாமி வெட்டி கொலை செய்துள்ளனர்.இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பழனி தாலுகா காவல்நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் பெரும்புதூரில் உள்ள மக்களிடையே பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |