Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கோபித்து சென்ற மனைவி…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப தகராறில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரியார் நகரில் மாணிக்கம்-துர்க்கை அம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் மாணிக்கம் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர்  அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன்படி கடந்த 12-ஆம் தேதி வந்த தகராறில் துர்க்கை அம்மாள், கணவனிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த மாணிக்கம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணிக்கத்திற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் மாணிக்கம் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணிக்கம் உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |