கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் கோவை சென்று இருக்கிறார்.
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கை பெரிய அளவில் விசாரிப்பதற்காகவும், ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நேரடியாக விசாரிப்பதற்கு சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் கோவை விரைந்திருக்கிறார். நாளை வழக்கு சம்பந்தமாக நேரடியாக கொடநாடு சென்று அவர் விசாரிக்க இருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது.
இன்று காலை 10:30 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தின் மூலம் புறப்பட்ட அவர் கோயமுத்தூர் வந்து இருக்கிறார். கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய காவல் அதிகாரிகளிடம் கொடநாடு வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு முன்பாகவே முக்கிய மீட்டிங் நடத்திவிட்டு, கொடநாடு விசாரணையை தீவிரப்படுத்த உள்ளார்.