கோவையில் கார் வெடித்த சம்பவம் தொடர்பாக டிஜிபி, தலைமைச் செயலாளருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை ஈடுபட்டு இருக்கிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் ஆகியோருடன் முதலமைச்சர் தற்போது ஆலோசனை ஈடுபட்டு வருகிறார். சற்று முன்பாக தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சரை சந்தித்த அதிகாரிகள் இதுகுறித்து ஆலோசனை ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை என்பது, தற்போது முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பாக இந்த ஆலோசனை என்பது நடைபெறுகிறது. அடுத்த கட்டமாக எந்த மாதிரியான விசாரணை மேற்கொள்ளலாம், ஏற்கனவே டிஜிபி அந்த பகுதியில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வந்தால், அங்கு பார்த்த விஷயங்கள், விசாரணை எந்த அளவில் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவுக்கு இருக்கிறது. சட்ட ஒழுங்கு நிலைமை எந்த அளவுக்கு இருக்கிறது ? என்பது குறித்து எல்லாம் முதலமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்து கூறுவார்கள்.
இது போன்ற சம்பவங்களில் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருப்பதற்கு எந்த மாதிரி நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் கேட்டறிந்து வருகிறார். இதற்கு பிறகு தமிழக அரச சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது. அது மட்டும் பாதுகாப்பு ஆங்காங்கே பலப்படுத்தப்படும். அதிகமாக பொதுமக்கள் கூட கூடிய இடங்கள், கோயில்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு ஏற்கனவே பலப்படுத்தப்பட்டு வருகிறது.