Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கோடைகாலத்தில் உடலிற்கு சக்தி அளிக்கும்.. வெஜிடபிள் ஜூஸ்..!!

நோய் கிருமியின் தொற்று மற்றும்  சளி, இருமல் போன்ற பாதிப்புகளில் இருந்து காத்து,உடலுக்கு சக்தியை கொடுக்கும் இந்த ஜூஸ் செய்முறையை பார்ப்போம்…

தேவையான பொருட்கள்:

கேரட்                                     – 1
சிவப்பு குடை மிளகாய்  – 1
மிளகு                                    – சிறிதளவு
தண்டு கீரை                        – 1
பூண்டு                                   – 4 பல்
தக்காளி பழம்                    – 3
உப்பு                                      – தேவைக்கு
கொத்தமல்லி தழை      – சிறிதளவு
தண்ணீர்                              – அரை கப்

செய்முறை:

கேரட்,சிவப்பு குடை மிளகாய், தக்காளி, தண்டு கீரையை நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பூண்டை சுத்தம்செய்து லேசாக இடித்து கொள்ளவும்.வாணலியில் சிறிது  தண்ணீர் ஊற்றி கேரட்,தக்காளி,தண்டு கீரை,குடைமிளகாய், பூண்டு, மிளகு, உப்பு போட்டு மிதமான சூட்டில் 20 நிமிடங்கள் வேகா விடுங்கள்.

காய்கறிகள் நன்கு  வெந்ததும் இறக்கி 10 நிமிடம் நன்றாக ஆற வைக்கவும்.
பின்னர் அந்த காய்கறிகளை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து விழுதாக எடுத்துக்கொள்ளுங்கள். இறுதியில் கொத்தமல்லி இலைகளை தண்ணீருடன் சேர்த்து மீண்டும் அரைக்கவும். இந்த ஜூஸை பிரிஜ்ஜில் சிறிது நேரம் வைத்து விட்டு பிறகு அனைவருக்கும் பரிமாறலாம்.

நோய் கிருமி  தொற்றுகளில் இருந்தும் இருமல்,சளி போன்ற  பாதிப்புகளில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள சுவையான வெஜிடபிள் ஜூஸ் ரெடி…..

Categories

Tech |