உடலை கோடைகாலத்தில் இருந்து காத்து கொள்ள எளிமையான முறையில் டிப்ஸ்:
கோடை காலத்தில் பயணம் செய்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் என அனைவரும் அதிகம் உடல் சம்மந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவைகளை தவிர்ப்பதற்கு நீர் ஆகாரங்களை அதிகம் பருக வேண்டும்.உணவில் கட்டுப்பாடு வேண்டும். சரும பிரச்சனை, வயிறு சம்மந்தமான பிரச்சனை ஏற்படாமல் எளிதில் தவிர்த்திடலாம்.
கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய பானங்கள்:
நாம் அனைவரும் எப்பொழுதுமே காபி மற்றும் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம், அவைகளை நாம் கோடைகாலத்தில் மட்டுமாவது தவிர்க்கலாமே..ஏன் என்றால் அவை நம் உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கும்.
அவ்வாறு நம் உடலில் ஏற்பட கூடிய வெப்ப சூட்டை தனிப்பதற்கு கிரீன் டீ அருந்தலாம். கிரீன் டீயில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் உடல் நிலையைச் சீராக வைத்துக் கொள்ள உதவும்.
அது மட்டுமில்லாமல் சருமத்தில் உண்டாகும் தோல் சம்மந்தமான பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்கும். இதில் முக்கியமான ஒன்று கோடைகாலத்தில் மட்டுமின்றி எக்காலத்திலும் சோடா மற்றும் மற்ற குளிர்பானங்களையும் தவிர்ப்பது உடலுக்கு சிறப்பு.
கோடை காலத்தில் நம் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்க கூடிய பானங்களை பருகுங்கள்:
நாம் எப்பொழுதுமே உடலில் நீர் சத்து குறையாமல் இருப்பதற்கு தண்ணீர் அருந்துகிறோம். நீர்ப்போக்கை சமாளிக்க நிறைய குடிநீர் குடிப்பது அவசியமான ஒன்று. எங்குச் சென்றாலும் குடிநீர் கையில் வைத்துக்கொள்வது அவசியம்.
எவ்வளவு தண்ணீர் அருந்துகிறோமோ உடல் நிலை அவ்வளவு சீறாக இருக்கும். ஏனெனில் ஒருவருக்கு அதிகமாக வியர்க்கும் வேலையில் அவருக்கு உடலில் இருந்து நீர் குறைவதோடு மட்டுமல்லாமல் உடலில் உள்ள எலெக்டரோலைட்ஸ், சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவும் குறைய வாய்ப்பு இருக்கும். இதை தவிர்க்க இளநீர் பருகலாம்.
அதிக அளவு பொட்டாசியம் இளநீரில் இருக்கிறது. எலுமிச்சை ஜூஸ் பருகுவதால் நம் உடலில் வைட்டமின்சி அதிகரிக்க உதவி புரியும். இது மட்டுமின்றி புதினா, துளசி, பெர்ரி பழங்கள் வைத்தும் பழச்சாறாக அரைத்து குடிக்கலாம்.
இவைகளில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. அதை பருகுவதால் கோடைகாலத்தில் ஏற்படும் சிறுநீர் உபாதைகள் போன்ற பிரச்சனைகள் தீரும். நீர்மோர் சுலபமாக தயாரிக்கலாம். நீர்மோரில் ப்ரோபயாடிக்ஸ் உள்ளதால் உடல்வெப்பநிலையை சமமாக வைத்து கொள்ளும்.
கோடைகாலத்தில் உண்ண வேண்டிய உணவு வகை:
நாம் சாப்பிடும் உணவில் மோர், தயிர் அதிகம் சேர்த்துக் கொள்வது ரொம்ப நல்லது. நார்சத்து அதிகம் உள்ள பழங்கள் காய்கள் அருந்தலாம். தர்பூசணி, வெள்ளரிக்காய், சுரைக்காய், இவைகள் அனைத்தும் நீர் சத்து அதிகம் உள்ள காய்கறிகள். இவைகளை சாப்பிடுவதனால் உடலில் நீர் சத்து அதிகரிக்கும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
ஆனால் தவிர்க்க வேண்டிய கோடைகாலத்தில் அசைவ உணவு சாப்பிடுவதை குறைத்து கொள்ளுங்கள். ராகி மசாலா, மேகி எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளவேண்டும்.
அஜீரணம் மற்றும் வயிற்று போக்கை ஏற்படுத்தும். எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் கோடை காலத்தில் தலை சுற்றல் மற்றும் வாந்தி ஏற்படக்கூடும். அளவோடு உண்டு வாழ்வில் ஆரோக்கியத்தை பெறுங்கள்…