Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அசத்தலான டிப்ஸ்…பேரழகியாக மாற வீட்டிலேயே அழகு செய்யலாம்..!!

கோடை காலங்களில் உங்கள் முகம் பளபளப்பாக இருக்க, இதோ இயற்கை முறையில் சில  டிப்ஸ்.

தீர்வு 1

குளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலறவிட்டு பின்பு முகத்தை கழுவ வேண்டும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலினால் சருமம் கருப்பாகாமல் மேலும் நிறத்தை மேம்படுத்தவும் உதவும்.

தீர்வு-2

பெரும்பாலும் வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தால் உங்கள் சருமம் பழுதடைந்துவிடும்.  சூரிய ஒளி அதிகம் பட்ட இடத்தில் நன்றாகவே நிறமாற்றம் அடைவதை காணலாம்.  இதில் இருந்து தீர்வு காண எலுமிச்சை சாற்றை கழுத்து மற்றும் முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் கழுவினால் நல்ல தீர்வு கிடைக்கும்.

தீர்வு 3

கற்றாலை இயற்கையிலேயே குளுமை தரும் குணம் கொண்டது. சருமம் பழுதடைந்த இடத்தில் கற்றாலையை ஃபேஷியல் பேக் போல தடவி, 5 லிருந்து 10 நிமிடம் வரை வைத்திருந்து முகம் கழுவினால் நல்ல பலன் பெறலாம்.

தீர்வு 4

கடலை மாவில்  பால் அல்லது தண்ணீர் கலந்து சருமம் பழுதடைந்த இடத்தில் அப்ளை பண்ண வேண்டும். பின் நன்கு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.  இது சிறந்த இயற்கை நிவாரணமாகும்.  இப்படி செய்து வந்தால் தோலின் நிறம் மேம்பட்டு வெண்மையாகத் தோன்றும்.

தீர்வு 5

கோடையை சமாளிப்பதற்காக உருவெடுத்தது வெள்ளரிக்காய்.  இதை  வட்டவட்டமாக நறுக்கி முகத்தில் வைத்து கால் மணி நேரம் கழித்து முகம் கழுவினால் நல்ல பலன் தரும்.  இதையே எலுமிச்சை சாறு அல்லது பன்னீரில் கலந்து பயன்படுத்தினால் முகம் மிகவும் புத்துணர்ச்சி அடையும்.

தீர்வு 6

உருளைக்கிழங்கு துருவல் சாறு மற்றும் தக்காளி விழுது இரண்டையும் கலந்து கொள்ளவும்.  கலந்து இந்த பேஸ்ட்டை கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்தால் தோலின் நிறம் மேம்பட்டு முகம் பளபளப்பாக மாறிவிடும்.

தீர்வு 7

சூரியனின் புற ஊதாக் கதிர்கள் நம் சருமத்தில் ஊடுருவி நிறமியை உற்பத்தி செய்யும் மெலனினை அதிகரிக்க செய்கிறது.  இதனால் முகம் கறுத்து விடுகிறது.  இதனை தவிர்க்க வெளியில் சென்று வந்தவுடன் தக்காளி சாற்றுடன்  தயிர் கலந்து முகத்தில் அப்பளை செய்து 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.  இவ்வாறு செய்தோமானால் முகம் கருக்காமல் இருக்கும்.

தீர்வு 8

புதினா வேப்பிலை, குப்பைமேனி மற்றும் சிறிது மருதாணி இலைகளை காயவைத்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.  இதில் சிறிதளவு எடுத்து பாலில் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை ஊற வைத்து குளித்து வந்தால் முகத்தில் வேர்க்குரு வராமலும், வெயிலில் முகம் கருத்துப் போகாமலும்  இருக்கும்.

தீர்வு 9

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் நன்றாக காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெயிலில் ஏற்பட்ட  கருமை நீங்கும்.

Categories

Tech |