எம்பிஏ எனப்படும் உலக புகழ்பெற்ற அமெரிக்க தேசிய கூடைப்பந்து ஆட்டத்தில் கலக்கிய ஜாம்பவான் கோபி பிரையன் விமான விபத்தில் மரணமடைந்தார்.
இவர் பயணித்த ஹெலிகாப்டர் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காலவாசஸ் வன பகுதியில், விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த கோரவிபத்தில் கோபிரையன் மட்டுமல்லாது அவரது 13 வயது மகள் ஹியானாமரியா பிரையன் உள்பட ஹெலிகாப்டரில் இருந்த 9 பேரும் உயிரிழந்தனர்.
41 வயதான அமரிக்க வீரர் கோபி கடந்த ஆண்டுதான் எம்பிஏ கூடைப் பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்றார். அதே வழியில் தனது மகளை ஹியானா மரியாவை இதில் ஈடுபடுத்திய பிரையன் போட்டி ஒன்றுக்கு அழைத்து சென்ற பொழுது துயர விபத்தில் சிக்கியுள்ளார்.
ஆட்டத்தின் போது மகளுக்கு உதவ கோபி சென்றது தெரியவந்துள்ளது. இவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் லாஸ்ஏஞ்செலில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில், விபத்தில் சிக்கியுள்ளது.
எம்பிஏ கூடைப்பந்தாட்டத்தில் மற்ற விளையாட்டு வீரர்களை போல் இல்லாமல் ஒரே அணிக்காக அதிக ஆண்டு விளையாடிய பெருமைகுரியவர் கோபிரையன் ஆவார். லாஸ்ஏஞ்செல்ஸ், லேக்கர்ஸ் அணிக்காக 1996 ம் ஆண்டு அடியெடுத்து வைத்த கோபிரையன் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் அசுரசூரனாய் வளம் வந்தார்.
இவரது அபார ஆட்டத்தால் லாக்கர்ஸ் அணி 5 முறை எம்பிஏ சாம்பியன் மகுடத்தை சூடியுள்ளது. கோபிரையன் மறைவால், அமெரிக்க கூடைப்பந்து களம் மட்டுமில்லாது உலக ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோபிரையன் மறைவை அறிந்த அமெரிக்கர்கள் லாஸ்ஏஞ்செலில் உள்ள அவரது உருவ படத்திற்கு திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தியா உள்பட பல்வேறு நாட்டின் ரசிகர்களும், கோபிரையன் மறைவிற்கு வேதனை அடைந்துள்ளர்னர்.