Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை கோடம்பாக்கம் கருஞ்சிவப்பு மண்டலமாக மாறியது…. 546 பேருக்கு கொரோனா பாதிப்பு!

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சென்னை கோடம்பாக்கம் கருஞ்சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,035 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 546 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் நேற்று மட்டும் புதிதாக 122 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்கள் மாறி மாறி முதலிடத்தில் இருந்த நிலையில், கோடம்பாக்கத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரு.வி.க நகரில் – 477, ராயபுரம் – 490, அண்ணா நகர் – 233, தேனாம்பேட்டை – 343, தண்டையார் பேட்டை – 207, வளசரவாக்கம்- 256, அம்பத்தூர் – 164, அடையாறு- 140 என இந்த பகுதிகள் அதிகம் பாதிப்படைந்துள்ளது. மேலும் திருவொற்றியூர் – 45, மாதவரம் -35, பெருங்குடி – 32, சோளிங்கநல்லூர் – 25, ஆலந்தூர், மணலியில் தலா 19 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இந்த நிலையில் கோடம்பாக்கம் பகுதியில் 500 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மாநகரில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு கருஞ்சிவப்பு மண்டலமாக கோடம்பாக்கம் மாறியுள்ளது. கோடம்பாக்கம் பகுதியில் 22 இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம் மாநகராட்சியினர் நேற்று முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் மக்கள் அனைவரும் முகக்கவசங்கள் அணிந்து தான் வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |