தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 461 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்கள் மாறி மாறி முதலிடத்தில் இருந்த நிலையில், கோடம்பாக்கத்தில் 461 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மண்டலவாரியாக பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரம் :
திரு.வி.க நகரில் – 448,
ராயபுரம் – 422,
அண்ணா நகர் – 206,
தேனாம்பேட்டை – 316,
தண்டையார் பேட்டை – 184,
வளசரவாக்கம்- 205,
அம்பத்தூர் – 105,
அடையாறு- 107,
திருவொற்றியூர் – 43,
ஆலந்தூர் -16,
பெருங்குடி – 22,
மாதவரம் – 33,
சோழிங்கநல்லூர் – 15,
மணலி – 14 பேரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.