Categories
மாநில செய்திகள்

கொடநாடு கொள்ளை வழக்கு: சயன் மீதான குண்டர் சட்டம் ரத்து …!!

கொடநாடு கொலை வழக்கில் கைதான சயன் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

கொடநாடு காவலாளி கொலை மற்றும் அங்கு நடைபெற்ற கொள்ளை  மேலும் வேகமாக கார் ஓட்டிக் டிப்பர் லாரியில் மோதி மனைவி மற்றும் குழந்தைகள் பலியானது , தெகல்கா ஆசிரியருடன் சேர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிராக பல்வேறு பொய்யான தகவல்களை பரப்பியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சயனை சிறையில் அடைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Image result for கொடநாடு கொள்ளை வழக்கு

இந்நிலையில் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சயன் தன்னுடைய மனுவில் விபத்தில் மனைவியும் பிள்ளையும் பறிகொடுத்த சம்பவத்தில் தன் மீதான குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் , கொடநாடு கொலை , கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி குறித்து பேசாமல் தடுப்பதற்காகவே தன்னை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைந்திருப்பதாகவும் ,  409 பக்கங்கள் தமிழில் ஆவணங்கள் கொண்ட தடுப்பு குண்டர் தடுப்பு சட்டத்தில் உத்தரவை தமிழ் தெரியாத தனக்கு வசித்து காட்டியதாகவும் ,. மலையாளத்தில் வழங்கப்படவில்லை என்றும் தன்னுடைய மனுவில் தெரிவித்திருந்தார்.

Image result for கொடநாடு கொள்ளை வழக்கு  சயன்

மேலும் இதன் அடிப்படையில் தன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ்  அமர்வு சயனுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி நீலகிரி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த அந்த குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதாகவும்,  அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட உத்தரவு செல்லாது எனவும்  தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |