கோடநாடு வழக்கில் ரமேஷை 5 நாள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கோடநாடு சதித்திட்டம் பற்றி தெரிந்தும் போலீஸ் விசாரணையின் போது தெரிவிக்காமல் மறைத்து கனகரஜ் செல்போன் பதிவுகளை அளித்தது உள்பட 4 பிரிவுகளில் கனகராஜ் சகோதரர் தனபால் மற்றும் அவரின் உறவினர் ரமேஷ் என்பவரையும் தனிப்படை போலீசார் கடந்த 25ஆம் தேதியன்று கைது செய்தனர். இவர்களை நவம்பர் 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உதகை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதின் படி இருவரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தனபாலிடம் கூடுதல் விசாரணை நடத்த வேண்டிய உள்ளது என்பதால் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து இன்று ரமேஷ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு கனகராஜ் இறந்த சம்பவத்தில் தடயங்களை அழித்த குற்றசாட்டில் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கேட்ட நிலையில் 5 நாட்கள் மட்டுமே விசாரணை செய்ய உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து போலீசார் ரமேஷை விசாரணை செய்வதற்காக அழைத்து சென்றனர்.