Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி சீக்கிரம் போட… கோடீஸ்வர தம்பதி செய்த மோசடி… இறுதியில் வெளிவந்த உண்மை…!!

கனடாவில் கொரோனா தடுப்பூசியை  முன்கூட்டியே பெற மோசடி செய்த குற்றத்திற்காக கோடீஸ்வர தம்பதியர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கனடாவில் உள்ள வான்கூவர் பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர தம்பதியினர் Rodney Baker –  Ekertina. இவர்கள் இருவரும் பூர்வ குடியினர் அதிகமாக வசிக்கும்  yukon என்ற இடத்திற்கு தனி விமானத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். அங்கு தங்களை ஹோட்டல் பணியாளர்கள் போல் அறிமுகப்படுத்திக் கொண்டு கணவன்-மனைவி இருவரும் கொரானா தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

பூர்வகுடியினர் மிகத் தொலைவில் வாழ்வதாலும், முதியோர் அதிகம் வாழும் சமூகத்தினரை கொண்டதாலும், அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் எளிதில் மருத்துவ சேவைகளை பெற  முடியாது என்பதாலும் பூர்வகுடியினருக்கு தடுப்பூசி செலுத்துவதில் yukon-ல் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதனை Rodney Baker –  Ekertina  தம்பதியினர் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு அங்கு சென்று மோசடி செய்து தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர்.

இக்குற்றத்தை அறிந்த  yukon காவல்துறையினர்  மோசடி செய்த குற்றத்திற்காக அத்தம்பதியர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர். மேலும் ஆயிரம் டாலர்கள் வரை அபராதமும் விதித்துள்ளனர். இந்த தகவல் வெளியானதும்  Rodney Baker தான் பணியாற்றும் பிரபலமான நிறுவனத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  அவரது மனைவி Ekertina பல திரைப்படங்களில் நடிகையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |