அமெரிக்காவின் கோடீஸ்வரர்களின் பட்டியலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் இடம் பெறவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் முதல் 400 கோடீஸ்வரர்களின் பட்டியலை பிரபல பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக கடந்த 25 வருடங்களில் முதல் முறையாக கோடீஸ்வரர்களின் பட்டியலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் இடம் வகிக்கவில்லை.
மேலும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் போது அவரின் சொத்து மதிப்பு 21,000 கோடியாக இருந்துள்ளது. ஆனால் தற்பொழுது இவருடைய சொத்து மதிப்பு 18 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. இதனால் முதல் 400 கோடீஸ்வரர்களின் பட்டியலில் டிரம்ப்பின் பெயர் இடம் பெறவில்லை என்று பிரபல நிறுவனம் தெரிவித்துள்ளது.