Categories
உலக செய்திகள்

இங்க கொடி அணிவகுப்பை நடத்தலாம்…. போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனர்கள்…. வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்….!!

இஸ்ரேலிய மக்கள் கிழக்கு ஜெருசலேமில் பேரணியை நடத்துவதற்கு அந்நாட்டு புதிய பிரதமர் அனுமதி அளித்துள்ளார்.

பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலுக்குமிடையே 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற மோதலில் இஸ்ரேல் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் ஜெருசலேமின் கிழக்குப் பகுதியையும் கைப்பற்றியது. இதனை கொண்டாடும் விதமாக தீவிர வலதுசாரி இஸ்ரேலியர்கள் கிழக்கு ஜெருசலேம் பழைய நகர் பகுதியில் கொடி நாள் அணிவகுப்பு பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டனர். ஆனால் இந்தப் பேரணியை நடப்பதற்கு பாலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றுள்ளார். இவர் தன்னுடைய புதிய ஆட்சியை தொடங்கியவுடனே கிழக்கு ஜெருசலேமின் பழைய நகர் பகுதியில் இஸ்ரேலியர்கள் கொடி நாள் அணிவகுப்பை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளார். இதனையடுத்து 1000 ம்கணக்கான இஸ்ரயேலர்கள் கலந்துகொண்டு கிழக்கு ஜெருசலேமின் பழைய நகர் பகுதியில் கொடிநாள் அணிவகுப்பை நடத்தியுள்ளார்கள்.

இந்த அணிவகுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு பாலஸ்தீனர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்துள்ளனர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இஸ்ரேலிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் கிழக்கு ஜெருசலேமின் பழைய நகர் பகுதியில் மிகவும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் விமானப்படை காசாவை குறிவைத்து வான்வழி தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது.

Categories

Tech |