விளாத்திகுளத்தில் அதிமுக மற்றும் திமுகவினர் இடையே கொடியேற்றும் விழாவில் மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற திரு மார்க்கண்டேயன் தலைமையில் விளாத்திகுளத்தில் திமுக கொடியேற்று விழா நேற்று மாலை நடைபெற்றது. அந்த நேரத்தில் விளாத்திகுளம் அதிமுக எம்எல்ஏ திரு சின்னப்பன் தலைமையிலான ஆளும் கட்சியினரும் அங்கு கொடி ஏற்றுவதற்கு வந்தன.
போலீஸ் தடையை மீறி அதிமுகவினர் கொடியேற்ற சென்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கோவில்பட்டி டிஎஸ்பி திரு கலை கதிரவனுக்கு ரத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினவ் சமாதான முயற்சியில் ஈடுபட்டார்.