ரஷ்ய அரசாங்கம் விடுத்த சிவப்பு கோடு எச்சரிக்கையை நோட்டா அலட்சியப்படுத்துவது பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை எடுக்க முடியாதபடி ஆக்குகிறது என்று ரஷ்ய நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரேன் நாட்டிற்கும், புதின் பிரதமராக இருக்கும் ரஷ்யாவிற்குமிடையே பல வருடங்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இதனையடுத்து புதின் பிரதமராக இருக்கும் ரஷ்யா தங்களது ராணுவ வீரர்களையும், பயங்கர போர் ஆயுதங்களையும் உக்ரைன் நாட்டின் எல்லையில் நிறுத்தி வைத்துள்ளது.
இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனுக்கு தொடர்ந்து தங்களது ஆதரவை கொடுத்து வரும் அமெரிக்கா, நோட்டாவின் குண்டு வீசும் அதிபயங்கர விமானங்களை உக்ரைனில் நிறுத்தி வைத்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் ரஷ்ய நாட்டின் அதிபரான புதின் நோட்டா படைகளுக்கு சிவப்பு கோடு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ரஷ்ய நாட்டின் பிரதமரான புதின் தேசிய தொலை காட்சியில் பேசும்போது மேற்குறிப்பிட்டுள்ள விவகாரம் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்றை விடுத்துள்ளார். அதாவது நோட்டாவிற்கு ரஷ்யா சிவப்புக் கோடு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஆனால் நோட்டா ரஷ்யா விடுத்த சிவப்பு கோடு எச்சரிக்கையை அலட்சியப்படுத்துகிறது. இவ்வாறு நோட்டா செய்யும் செயல் இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை சிதைக்க கூடும் என்று தெரிவித்துள்ளார்.