இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சொகுசுக் கார்களை வாங்கிக் குவிப்பதிலும், கார் ஓட்டுவதிலும் அலாதி பிரியம் கொண்டவர்.
ஆடி கார் நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் கோலி செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் ஆடி நிறுவனம் தனது புதிய சொகுசுக் காரான ஆடி க்யூ8 (Audi Q8) மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த விழாவில் பங்கேற்க கோலி ஆடி க்யூ8-ன் முதல் காரை தனக்கு சொந்தமாக்கினார்
ஏற்கனவே ஆடி க்யூ7, ஆடி ஆர்எஸ்5, ஆடி ஏ8எல், ஆடி ஆர்8, ஆடி வி10 எல்எம்எக்ஸ், பென்ட்லி காண்டினென்டல் ஜிடி, ரேஞ்ச் ரோவர் வோக் உள்ளிட்ட பல சொகுசு கார்களை கோலி வைத்துள்ளார்.
தற்போது ஆடி க்யூ8 (Audi Q8) சொகுசுக் காரை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார். இந்தக் காரின் மதிப்பு 1 கோடியே 33 லட்சம் ரூபாய் ஆகும்.
எல்இடி ஹெட் லைட்ஸ், எல்இடி இன்டிகேட்டர்ஸ், எல்இடி டெய்ல் லைட்ஸ், 12.3 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே இன்ஸ்டுரூமென்ட் கன்சோல், ஆடி ஸ்மார்ட் போன் இன்டர்ஃபேஸ் உள்ளிட்ட பல வசதிகளுடன் ஆடி க்யூ8 களமிறங்கியுள்ளது.
Captain @imVkohli unveils the #AudiQ8 at the exclusive India launch. #8thDimension pic.twitter.com/4ezPojbUAa
— Audi India (@AudiIN) January 16, 2020