தோனி இன்று தனது ஓய்வை அறிவிப்பார் என்று செய்தி பரவியதை அடுத்து சமூக வலைதளத்தில்#Dhoni என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது.
இன்று காலை 11.16 மணிக்கு இந்திய கேப்டன் விராட் கோலி தனது ட்வீட்_டர் பக்கத்தில் ஒரு ட்வீட் பதிவிட்டார். அதில்2016-ஆம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தோனியுடன், விராத் கோலி வெற்றிக்களிப்பில் இருப்பது போன்ற படத்தையும் பதிவிட்டார் விராட் கோலி. இதோடு கோலி ”ஆட்டத்தின் போக்கை மாற்றுபவர் தோனி தான்.அவருடன் விளையாடியதை மறக்க முடியாது” என்று பதிவிட்டிருந்தார்.
A game I can never forget. Special night. This man, made me run like in a fitness test 😄 @msdhoni 🇮🇳 pic.twitter.com/pzkr5zn4pG
— Virat Kohli (@imVkohli) September 12, 2019
இதையடுத்து இந்திய ரசிகர்களிடம் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. தோனியை எங்கே ? அவர் எங்கு இருக்கிறார் ? என்ன செய்து கொண்டு இருக்கின்றார். கோலி எதற்காக தீடிரென இப்படி ஒரு கருத்தை பதிவிட்டார் என்று ரசிகர்கள் இதற்கான விடயத்தை தேடிக்கொண்டு இருக்கும் நிலையில் இன்று இரவு தோனி செய்தியாளர்களை சந்திக்கிறார் என்றும் ஒரு செய்தி உலாவ தொடங்கியது.
கோலின் தீடிர் ட்வீட் செய்தியாளர்கள் சந்திப்பு இந்த இரண்டையும் ஒப்பீட்டு பார்த்த ரசிகர்கள் MS.தோனி ஓய்வை அறிவிக்கின்றார் என்று வேதனை அடைந்து தங்களின் கவலையையும் , சோகத்தையும் சமூகவலைத்தளத்தில் வைரலாக்கினர். ஓட்டு மொத்த இந்திய ரசிகர்களும் டீவீட்_டரில் தங்களது சோகம் கலந்த கருத்தை வெளியிட்டதால் இந்தியளவில் #Dhoniஎன்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகியது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு தலைவர் MSK பிரசாத் தோனி ஓய்வு குறித்து எந்த தகவலும் இல்லை , சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரவுவதாக விளக்கம் அளித்தார். இந்நிலையில் அனைத்து ரசிகர்களும் நிம்மதியடைந்த நிலையில் தொடர்ந்து தோனிக்கு ஆதரவாக தங்களது கருத்தை வெளியீட்டு வருகின்றனர். தோனி என்ற ஹாஸ்டக் ட்வீட்_டரில் இந்தியளவில் 3_ஆவது இடத்தில் ட்ரெண்ட்_டாகி வருகின்றது.