கொய்யா இலைகளின் மருத்துவ பயன்கள்…இந்த இலையில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறதா .?
ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லகூடிய அதிக சத்துக்கள் நிறைந்த எளிதில் எங்கும் கிடைக்கக் கூடிய கொய்யாப்பழம் அனைவரும் சாப்பிட்டிருப்போம். ஆனால் கொய்யா இலைகளை நாம் அந்த அளவுக்கு பயன்படுத்துவது இல்லை. இந்தக் கொய்யா இலைகளின் பயன்களைப் பற்றி தெரிந்து கொண்டால் ஆஹா இந்த இலைகளில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறதா என்று ஆச்சர்யப்படுவீர்கள்.
1. கொய்யா இலையில் விட்டமின் “ஏ”, விட்டமின் “சி”, விட்டமின் “பி”, கால்சியம், அயன், மெக்னிசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், சோடியம், ஆன்டி ஆக்சிடென்ட், பாலிபீனால் இன்னும் பல நன்மை செய்யக் கூடிய வேதிப் பொருள் அடங்கியுள்ளதால் இது பலவிதமான நோய்களை தீர்க்கும் அருமருந்தாக செயல்படுகிறது.
2. இரண்டு அல்லது மூன்று கொய்யா இலைகளைப் பறித்து நன்றாக கழுவி அதை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் பற்களில் இருக்கக்கூடிய வலி, ஈறுகளில் இருந்து ரத்தம் வருதல், ஈறுகளில் வீக்கம், பல் சொத்தை, வாய் புண், பற்களில் உள்ள கறை, வாயில் துர்நாற்றம் போன்றவை எளிதில் சரியாகிவிடும்.
3. 10 முதல் 12 கொய்யா இலைகளை பறித்து நன்றாக கழுவி அதை ஒன்றிலிருந்து, ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து தேநீர் தயாரித்து சாப்பிடலாம். இதை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பலவிதமான நன்மைகளை பெறலாம். அவ்வாறு அருந்தினால் வயிற்றுப் புண், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, காய்ச்சல், இருமல், தொண்டை சம்பந்தப்பட்ட வியாதிகள் சரியாகும்.
4. இது கல்லிரளின் பணியை ஒழுங்குபடுத்தி கல்லீரல் நோய்கள் வரவிடாமல் தடுக்கும். ஹைப்போ தைராய்டிசத்தை சரிசெய்யும். தைராய்டு சுரப்பியின் பணியை சீராக்கும்.
5. ‘ட்டைடுடையபெடீஸ்’ என்று சொல்லகூடிய சர்க்கரை வியாதிக்காரர்களின் அதிக இரத்த சக்கரையின் அளவை சமநிலைக்குக் கொண்டு வந்து விடும். இன்சுலின் ப்ரஸிஸ்டன்ஸை குறைக்கும். இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.
6. நோய்த்தடுப்பாற்றலை அதிகரிக்கும். அதே மாதிரி எல்டீஎல் மற்றும் ட்ரைகிளிசரைட் என்று சொல்லக் கூடிய கெட்ட கொழுப்பை குறைக்கும்.
7. குடிபோதையில் இருக்க கூடியவர்களுக்கு இந்த கொய்யா இலைகளையோ அல்லது கொய்யா இலையில் தேநீர் தயாரித்து கொடுத்தால் அந்த குடிபோதை உடனே தணியும்.
8. சிறிதளவு கொய்யா இலைகளை பறித்து கழுவி நன்கு அரைத்து முகத்தில் பூசி ஒரு மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவினால் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், முகச்சுருக்கம் ஆகியவை சரியாகி முகம் பளிச்சென்று இருக்கும்.
9. கொய்யா இலைகளை பறித்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க, தலையில் இருக்கக்கூடிய பொடுகு, அரிப்பு, முடி உதிர்தல், தலையில் இருக்கக்கூடிய பேன்கள் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
10. கொய்யா இலைகளை சிறிதளவு எடுத்து குளிக்கும் நீரில் போட்டு கொதிக்கவைத்து, ஆறவைத்து தலைக்கு குளிக்க வேண்டும். இதை தொடர்ச்சியாக செய்தல் முடிஉதிர்தல் படிப்படியாக குறையும்.