Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொய்யா பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை என்று தெரியுமா..?

கொய்யா பழம்  உயிர்சத்துகளையும்,  தாது உப்புகளையும், கொண்டுள்ளது. கொய்யா இலைகள் மூலம் கஷாயம் தயாரிக்கலாம். இருமல் தொண்டை மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு இந்த கஷாயம் தீர்வு அளிக்கிறது.

கொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள்:

கொலஸ்ட்ரால் இல்லை,  சோடியம் – 3 மிகி, பொட்டாசியம் 417 மிகி, கார்போஹைட்ரேட் 14 கி, புரோட்டின் 2.6 கி, விட்டமின் ஏ 12 சதவீதம்,  விட்டமின் D, விட்டமின் B12 , விட்டமின் C, இரும்புச்சத்து, விட்டமின் B6, மக்னீசியம் ஆகிய  சத்துக்கள் இருக்கிறது.

அதனுடைய பயன்கள்:

கொய்யா பழத்தை நன்கு  கழுவிய பிறகு, பற்களால் கடித்து நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.வேறு எந்தப் பழத்திலும் இல்லாத விட்டமின் சி  உயிர்ச்சத்து,  இந்த பழத்தில் அதிக அளவில் உள்ளது.

அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யா பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் உதவும். கொய்யாவின் தோலில் தான் அதிகமான சத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் கூட தரும்.

தோல் வறட்சியை நீக்கும்,  முதுமை தோற்றத்தை குறைக்கும்,  இளமையானவராக மாற்றும்,  மது போதைக்கு அடிமையாக இருப்பவர்களை, அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு இப்பழம் சிறந்த மருந்தாகும்.இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து, காயத்தின் மேல் தடவினால், அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கு மருந்தாக உதவுகின்றன.கொய்யாமரத்தின் பட்டை, பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர் பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும்.

எப்போது சாப்பிட வேண்டுமென்று தெரியுமா..? 

சாப்பிடுவதற்கு முன்னாடி  இப்பழத்தை தின்பது  நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிட்டால் நல்லது.

கொய்யா பழத்தை இரவில்  மட்டும் சாப்பிடவே கூடாது:

நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள், இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள், இப்பழத்தை சாப்பிட்டால்  நோய் அதிகரிக்கும்.

கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் தன்மை  உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

Categories

Tech |