Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! 2 பெண்களை ஒரே வாலிபரா…? சி.சி.டி.வி கேமராவில் தூக்கிய காவல்துறை அதிகாரிகள்…. நீதிமன்றத்தில் வெளிவந்த உண்மை….!!

பூங்காவில் வைத்து 2 பெண்களை கத்தியால் குத்தி கொலை செய்ததற்காக காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இளைஞனின் குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

லண்டனிலுள்ள Barnett Grove என்னும் பகுதியில் டானியல் ஹுசைன் என்னும் 19 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் Wembley என்னும் பூங்காவில் வைத்து பிறந்தநாள் விழாவை கொண்டாடிய 2 சகோதரிகளை கத்தியால் பயங்கரமாக குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பூங்காவிலுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதற்கிடையே பூங்காவில் இருந்த எவரோ அங்கு நடைபெற்ற கத்தி குத்து சம்பவம் குறித்த தகவலை காவல்துறையினருக்கு கூறியுள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் பூங்காவில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சியின் மூலம் 2 பெண்களை கொலை செய்தது Daniel Hussain என்பதை கண்டறிந்துள்ளார்கள்.

இதனையடுத்து Daniel லை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். இது தொடர்பான வழக்கு old Bailey என்னும் நீதிமன்றத்தில் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. அவ்வாறு நடந்த விசாரணையில் Daniel லின் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |