ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் சிறைச்சாலையில் பணியாற்றிய 8 மாத கர்ப்பிணியை அவரது கணவர் மற்றும் குழந்தையின் முன்பாகவே சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் firozkoh என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் 8 மாத கர்ப்பிணியான பானு நகர் என்ற பெண்மணி பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இந்த 8 மாத கர்ப்பிணியான பானுவை ஆயுதம் தாங்கிய 3 தலிபான்கள் அவரது கணவர் மற்றும் குழந்தையின் கண் முன்பாகவே சுட்டுக்கொன்றுள்ளார்கள்.
மேலும் இவர் முந்தைய அரசாங்கத்தில் பணி புரிந்ததாலயே தலிபான்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார் என்று கருதப்பட்டுள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த தலிபான்களின் செய்தி தொடர்பாளர் அவர் ஏதேனும் தனிப்பட்ட விஷயத்தாலயே கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.