அமெரிக்காவில் வசித்து வந்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டான 40 வயதுடைய இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண்மணியை அவருடைய முன்னாள் குத்தகைக்காரர் ஒருவர் துப்பாக்கியை கொண்டு சுட்டுக் கொன்றுள்ளார்.
அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாநிலத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டான சாரா என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 40 வயதுடைய சாராவை அவரது முன்னாள் குத்தகைகாரரான ரோமன் என்பவர் துப்பாக்கியைக் கொண்டு சரமாரியாக சுட்டுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சாராவிற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சாரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் சாராவின் முன்னாள் குத்தகைக்காரரான ரோமனை கைது செய்துள்ளார்கள்.