கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தருவை பகுதியில் பராசக்தி என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பவரின் உறவினரான உத்திரமூர்த்தி என்பவர் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து பராசக்தி முன்னீர்பள்ளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உத்திரமூர்த்தியை கைது செய்துள்ளனர். இந்நிலையில் பராசக்தி அவரது வீட்டின் முன்பு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது குமார், பராசக்தியை வழிமறித்து உத்திரமூர்த்தியை கைது செய்ததற்கு நீதான் காரணம் எனக் கூறி அவரை அவதூறாக பேசினார். அதன் பின்னர் பராசக்தியை அரிவாளால் தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பராசத்தி முன்னீர்பள்ளம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குமாரை கைது செய்துள்ளனர்.