ஒருவர் வீட்டிற்கு சென்று பெண்ணை திருமணம் செய்து தரவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என வாலிபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் சேதுபதி என்பவர் வசித்து வருகிறார். அதன்பின் மற்றொரு பகுதியில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இருவரும் சேர்ந்து பஜனை கோவில் தெருவில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்று அங்கிருந்த பெண்ணின் தந்தையிடம் தங்கள் மகளை விரும்புவதாக சேதுபதி கூறியுள்ளார்.
அதனால் தனக்கு திருமணம் செய்து தரவேண்டும் இல்லை என்றால் கொன்றுவிடுவேன் என கத்தியை காட்டி மிரட்டியதாக தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபர்கள் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.