Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த வியாபாரி…. கொலை செய்ய முயன்ற மர்மநபர்கள்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பால் வியாபாரியின் தலையின் மீது கல்லை தூக்கி போட்டு கொலை செய்ய முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் அன்னக்கொடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லபாண்டி என்ற மகன் உள்ளார். இவர் பால் பூத்து வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் செல்லப்பாண்டி இரவு பால் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையின் முன்புறம் படுத்திருந்தார். அப்போது மர்ம நபர்கள் செல்லப்பாண்டியின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்ய முயன்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த செல்லபாண்டி அலறி சத்தம் போட்டுள்ளார்.

அந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் செல்லபாண்டியை உடனடியாக மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு செல்லப்பாண்டி பலத்த காயத்துடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |