Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“திருமணத்தை மீறிய உறவு”… இடையூறாக இருந்த தொழிலாளி கொலை… கொலையாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டணை…!!

சேலத்தில் தொழிலாளியை கொலை செய்த டெய்லருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன சீரகாபாடி பகுதியை சேர்ந்தவர் பெருமாள்(35). இவர் கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி(32). இவர்  சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வந்தார். இந்நிறுவனத்தில் திருவாரூரை சேர்ந்த அருள்செல்வன்(35) என்பவரும் பணிபுரிந்து வந்தார்.

இவர்கள் இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. இவர்களது உறவு பெருமாளுக்கு தெரிய வந்ததால் அவர் முருகேஸ்வரியையும் அருள் செல்வத்தையும்  கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருள்செல்வன் தங்களது உறவிற்கு இடையூறாக இருந்த பெருமாளை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி 2018 ஆம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி அருள்செல்வன்  பெருமாளை மது குடிக்க வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து இருவரும் வீரபாண்டி ஏரிக்கு அருகிலிருந்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.

அப்போது திட்டமிட்டபடி அருள் செல்வன் பெருமாளை கீழே தள்ளி கழுத்தை அறுத்து கொலை செய்தார்.மேலும்  மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரின்  உதவியுடன் பெருமாளை தூக்கி வீரபாண்டி ஏரியில் வீசியுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது.

இந்நிலையில்  வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று இந்த வழக்கிற்கு  தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கள்ள தொடர்பிற்கு இடையூறாக இருந்த பெருமானை கொலை செய்ததற்காக அருள் செல்வத்திற்கு ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் உடந்தையாக இருந்த  பால் பாண்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Categories

Tech |