Categories
தேசிய செய்திகள்

கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண்ணை!…. 7 வருஷத்துக்கு பின் தேடி கண்டுபிடித்த நபர்…. பரபரப்பு நிறைந்த பின்னணி?…!!!!

ராஜஸ்தான் மாநிலம் மதுரா மாவட்டத்தில் ஜான்சி கிராமத்தில் வசித்து வந்த ஆரத்தி என்ற பெண் 7 வருடங்களுக்கு முன்பு காணாமல் போனார். அந்த பெண்ணை அவரது காதலரான சோனு சைனி திருமணம் செய்து, கொலை செய்துவிட்டார் என ஆரத்தியின் பெற்றோர் குற்றச்சாட்டு வைத்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து கடந்த 2015ம் வருடத்தில் சோனு மற்றும் அவரது நண்பர் கோபால் சிங் இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் 2 வருடங்களுக்கு முன் சிறையிலிருந்து இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இது தொடர்பாக சோனு கூறியதாவது, சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்ததும் ஆரத்தியை நாங்கள் தேட ஆரம்பித்தோம். அப்போது விஷாலா கிராமத்தில் வசிக்கும் நபர், ஜான்சியிலிருந்து ஒரு பெண் தங்கள் கிராமத்திற்கு வந்துள்ளார் என கூறினார். அதன்பின் நான் அந்த கிராமத்திற்கு சென்றேன். அங்கு ஆரத்தியை அடையாளம் கண்டு கொண்டு, அதை உறுதிசெய்தேன். இது தொடர்பாக மெகந்திப்பூர் போலீஸ் நிலையத்தில் கூறியபோது, ஆரத்தியின் அடையாளம் எங்களுக்கு வேண்டும் எனக்கூறி உதவிசெய்ய மறுத்து விட்டனர். இதனால் அடையாள அட்டை எனக்கு கிடைக்க 2 வருடங்கள் ஆகிவிட்டது.

அதன்பின் காவல்துறையினர் ஆரத்தியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி அவரை கண்டுபிடித்தனர். அதாவது ஆரத்தி, கணவரான பகவான்சிங் ரேபாரி என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையில் ஆரத்தி தன் பெற்றோருடன் தொடர்பில் இருந்ததும், அவரது கொலைக்காக சோனு மற்றும் கோபால் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டது பற்றியும் ஆரத்தி அறிந்து இருந்துள்ளார். இதனிடையில் சோனுவின் கைது நடவடிக்கையால் இவரது தந்தை அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். அதேபோல் வழக்கு செலவுக்காக ரூபாய்.20 லட்சம் வரை சோனு செலவிட்டு, கடனாளியாகி இருக்கிறார். ஆகவே அனைத்தையும் இழந்துவிட்டேன் என சோனு தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

Categories

Tech |