கொலை செய்யப்பட்ட பெண்களை பிரித்தானியா ஓவியர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வரைந்துள்ளார்.
பிரித்தானியாவில் Sarah Everard என்ற பெண் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி Wayne Couzens என்ற போலீசாரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராக Jess Phillips பேசினார். அப்பொழுது, பிரித்தானியாவில் கடந்த 2020 முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் வரை மட்டும் 118 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் வாசித்தார். இந்த நிலையில் இச்சம்பவத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட Henny Beaumont என்னும் பிரித்தானிய ஓவியர் அந்த 118 பெண்களையும் ஓவியமாக வரைந்துள்ளார். அதிலும் பெண் நீதிக்காக போராடும் Henny அனைவரிடமும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக அந்த பெண்களை ஓவியங்களாக வரைந்துள்ளார்.
சான்றாக மலேசிய தமிழரான பூர்ணா கமலேஷ்வரி சிவராஜும் ஓவியமாக வரையப்பட்டுள்ளார். குறிப்பாக பூர்ணா மற்றும் அவர்களின் மூன்று வயது மகனான கைலாஷையும் கணவர் குகராஜ் கொலை செய்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் மருத்துவரான சமான் மீர் சச்சார்வி அவரின் மகளான வியன் மாங்ரியோ மற்றும் ரஞ்சித் கில் ஆகியோரின் புகைப்படங்களும் அதில் காணப்பட்டது.