Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஜாதி மாறி திருமணம் செய்த தம்பதி…. சி.பி.ஐ விசாரணையில் சிக்கிய 15 பேர்…. நீதிபதியின் தீர்ப்பு….!!

ஜாதி மாறி திருமணம் செய்ததால் 2 பேரை கொடூர கொலை செய்த 13 நபர்களுக்கும் நீதிபதி தண்டனை வழங்கியுள்ளார்.

கடலூரிலுள்ள ஒரு பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கண்ணகி என்ற வேறு ஜாதியை சார்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த கண்ணகியின் உறவினர்கள் அவர்களை கொடூரமாக கொலைச் செய்து எரித்துள்ளனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கு சி.பி.ஐ வசம் வந்த நிலையில் தற்போது அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்ததில் பதினைந்து நபர்களை அதிகாரிகள் குற்றவாளியாக கண்டுபிடித்துள்ளனர்.

அதன்பின் இந்த வழக்கின் விசாரணை இம்மாவட்ட எஸ்.சி எஸ்.டி நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது வழக்கில் சாட்சிகளிடம் மற்றும் வாத பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் இதில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்துள்ளார்.

பின்னர் இரண்டு பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு பிற்பகல் தண்டனை அறிவிக்கப்பட்டது. இதில் கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு  தண்டனையும், மற்ற 12 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |