Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொலைவெறி தாக்குதலை கண்டித்து…. நடைபெற்ற சாலை மறியல்…. திருவாரூரில் பரபரப்பு….!!

நிர்வாகிகள் தாக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள கே.மேலூர் என்ற இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்ற சென்றனர். அப்போது நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்ட கும்பலை கண்டித்து திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் ரவுண்டானாவில் விடுதலைச் சிறுத்தைகள்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளரான வடிவழகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் கணேசன், செய்தி தொடர்பாளர் தமிழ்ச்செல்வன், மாநில துணைச் செயலாளர் அறவாணன், நகர செயலாளர் ஆசைதம்பி, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை தொகுதி செயலாளர் நெப்போலியன் உட்பட பெரும்பாலான கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோன்று திருத்துறைபூண்டி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கிழக்கு கடற்கரை சாலை பாமணி, கடைத்தெருவில் இக்கட்சியின் செயலாளர் தலைக்காடு ரஜினி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் முல்லை வளவன், நகர செயலாளர் ஜான்மைக்கேல், ராஜ், பாமணி பாலசுரேஷ் போன்றோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் தூத்துக்குடி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |