Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மெக்கானிக்கை வீட்டிற்குள் தள்ளிவிட்டு…. கொள்ளையர்களின் கைவரிசை…. வேலூரில் பரபரப்பு….!!

மெக்கானிக்கை கொள்ளையர்கள் வீட்டிற்குள் தள்ளிவிட்டு நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை தோபாசாமி கோவில் தெருவில் பழனி என்பவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக வசித்து வருகின்றார். இவர் சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு பேருந்தின் மூலம் வேலூருக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டிற்கு புறப்பட்டார். அதன்பின் தெருவில் இறங்கி அவர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது பழனியை 3 பேர் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

இதனைதொடர்ந்து பழனி வீட்டிற்கு செல்வதற்காக கதவைத் திறந்த போது திடீரென கொள்ளையர்கள் 3 பேரும் அவரை வீட்டிற்குள் பிடித்து தள்ளிவிட்டு உள்பக்கமாக கதவை பூட்டி விட்டனர். மேலும் பழனியை தாக்கி கத்தியை வைத்து மிரட்டி வீட்டில் இருந்த சுமார் 7 பவுன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு சென்றுள்ளனர். எனவே கொள்ளையர்கள் தாக்கியதால் பழனியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்ப்பதற்குள் அவர்கள் தப்பி விட்டனர். அதன்பின் பழனியை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெண்ட்லேண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், உதவி சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் போன்றோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆகவே கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்கு சைதாப்பேட்டை பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வாறு பழனி வீட்டில் திருடப்பட்ட  நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு சுமார் 31/2 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

Categories

Tech |