Categories
உலக செய்திகள்

என்ன விசேஷம் அங்க….? வண்ணம் மிகுந்த வான வேடிக்கைகள்…. அணிவகுப்பு நடத்திய வீரர்கள்…!!

பிரெஞ்சு நாட்டின் தேசிய தினமானது கோலாகலமாக வான வேடிக்கைகளுடன் நேற்று கொண்டாடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் அந்நாட்டின் தேசிய தினத்தை நேற்று கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்துக்கு அருகில் பிரஞ்ச் தேசியக்கொடியின் வண்ணங்களில் வான வேடிக்கைகள் நடத்தப்பட்டன. மேலும் பாரீஸில் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் மற்றும் காவலர்கள் அணிவகுப்பு  நடத்தியுள்ளனர்.

பிரெஞ்சு நாட்டின் தேசிய தினமானது அந்நாட்டின் பிரெஞ்சுப் புரட்சியின் போது திருப்புமுனையாக அமைந்த பாஸி சிறையை பொதுமக்கள் உடைத்து அங்குள்ள கைதிகளை விடுவித்த நாளாக கொண்டாடப்படுகிறது.

Categories

Tech |