பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.எம்.டி. நகரில் திவ்யா என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருக்கும்போது மோட்டார்சைக்கிளில் முககவசம் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் திவ்யா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது திவ்யா நகைகளை தனது கைகளால் இருக்கமாக பிடித்தும் சங்கிலி அறுந்து மர்ம நபர்களிடம் 2 3/4 பவுன் சிக்கிவிட்டது.
இதனையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து திவ்யா கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் சி.சி,டி.வி. கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.