விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன் பிறகு இந்த வாரத்தில் பெண்களிடம் எப்போதும் தவறான முறையில் நடந்து கொள்ளும் அசல் கோலார் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் பார்வையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
இந்நிலையில் அசல் வீட்டுக்குள் எப்போதும் நிஷாந்தினியை கட்டிப்பிடிப்பது, கடிப்பது, அவர் மீது கால் போடுவது, பெண்கள் அசந்த நேரத்தில் அவர்களை அத்துமீறி தொடுவது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து வனிதா அசல் பெண்களை தொடுவது மிகவும் அருவருப்பாக இருக்கிறது என கூறியிருந்தார்.
இதனால் தற்போது ரசிகர்கள் பலரும் வனிதாஅக்கா மட்டும் தற்போது வீட்டுக்குள் இருந்தால் என்ற மீம்சை இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர். மேலும் வனிதா வீட்டுக்குள் இருந்திருந்தால் கண்டிப்பாக அசலை ஒரு வழியாக்கியிருப்பார் எனவும் நெட்டிசன் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த பதிவுகளை தற்போது வனிதா விஜயகுமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Sweet https://t.co/jCS6Sph91v
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 28, 2022