பாம்பு கடித்ததில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கரந்தை தைக்கால் தெருவில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷாவர்ஷினி என்ற மகள் இருந்தார். இவர் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாமாண்டு பயின்று வந்தார். இந்நிலையில் நிஷாவர்ஷினி தனது வீட்டின் பின்புறம் கோழி அடைக்க சென்றார். அப்போது அங்கு இருந்த பாம்பு நிஷாவர்ஷினியை கடித்தது.
இதனால் வாயில் நுரை தள்ளியவாறு நிஷாவர்ஷினி மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நிஷாவர்ஷினி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து மணிவண்ணன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.