புனேயில் புதிய தீவனமண்டியிலிருந்து தீவனம் வாங்கி கோழிக்கு போட்டதனால் முட்டை போடவில்லை என்று விவசாயி புகார் தெரிவித்துள்ளர்.
புனே லோனிகால்பர் பகுதியிலுள்ள ஆலந்தி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் கோழிப்பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். அதே கிராமத்தில் தீவனமண்டி ஒன்று புதியதாக திறக்கப்பட்டது. அதிலிருந்து கோழிக்கு தீவனம் வாங்கிச் சென்றுள்ளார். தீவனத்தை கோழிக்கு தொடர்ந்து ஒரு வாரம் போட்டு வந்ததில் கோழிகள் அனைத்தும் தீவனத்தை மட்டும் வயிறு முட்ட தின்று பெரிதாகிவிட்டது.
ஆனால் ஒரு கோழி கூட முட்டையிடவில்லை என்று வருத்தம் அடைந்த விவசாயி கோழி தீவனம் வாங்கிய மண்டிக்கு தொடர்புகொண்டு நடந்ததை கூறியபோது தீவனமண்டி நிறுவனம் உரிமையாளர் அதற்கு சரியான பதிலை அளிக்காத காரணத்தினால் கோபம் அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விவசாயி அருகில் உள்ள காவல் நிலையத்தில் அவர்களின் தீவனத்தை சாப்பிட்டதினால் தான் கோழிகள் எதுவும் முட்டை போடவில்லை என்று புகாரை அளித்தார் . போலீசாரு தீவனமண்டியின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோழி முட்டை போடாத காரணதிக்காக போலீசில் புகார் அளித்தது அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது .