Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கு… புதிய கேப்டன்கள்… பிசிசிஐ தகவல்…!!

கொல்கத்தா ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டன்கள் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

14வது ஐபிஎல் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக காலவரையின்றி போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பிசிசிஐ மீதமுள்ள 31 ஐபிஎல் ஆட்டங்களை செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த முடிவு செய்தது.

இதையடுத்து தற்போது இந்த போட்டிகளுக்கு ஐதராபாத், கொல்கத்தா அணிகளுக்கும் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து, நியூசிலாந்து ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஐபிஎல் போட்டிகளில் வங்கதேச வீரர்களும் பங்கேற்பது சந்தேகமே என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

Categories

Tech |