நேற்று நடந்த 5வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், 5வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்ததால் ,மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் களமிறங்கியது. இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய கொல்கத்தா அணி 153 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது . ஆனால் மும்பை அணியின் பவுலிங் சிறப்பாக அமைந்ததால், கொல்கத்தா அணி வீரர்கள் அவுட் ஆகி வெளியேறினர் . இறுதியாக கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை எடுத்து, தோல்வியை சந்தித்தது. இதனால் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது.
நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா அணி சுலபமாக வென்று விடும், என்று அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ,தோல்வியை சந்தித்தது . நேற்று கொல்கத்தா தோல்வி அடைந்ததற்கு, ரசிகர்கள் ட்விட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தவகையில் கொல்கத்தா அணி உரிமையாளர்களில் ஒருவரான பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் கொல்கத்தா நேற்று தோல்வியடைந்தது மிகவும் ஏமாற்றத்தை தந்ததாகவும், இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரசிகர்களிடம் ,நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
Disappointing performance. to say the least @KKRiders apologies to all the fans!
— Shah Rukh Khan (@iamsrk) April 13, 2021