கொல்கத்தா அணி 5 ஓவர் முடிவில் 44/2 ரன்களுடன் விளையாடி வருகிறது.
ஐ.பி.எல்லில் இன்று 6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர்.
முதல் ஓவரில் முகமது சமி 1 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.இதையடுத்து வருண் சக்கரவர்த்தி வீசிய 2வது ஓவரில் சுனில் நரேன் 3 சிக்ஸர் 1 பவுண்டரி என அந்த ஓவரில் 26 ரன்கள் விளாசினார். இதையடுத்து சமி வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி விளாசிய கிறிஸ் லின் அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.இதையடுத்து 4 ஓவரில் சுனில் நரேனும் ஆட்டமிழந்தார். தற்போது உத்தப்பாவும்,ராணாவும் விளையாடி வருகின்றனர்.