இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன
ஐ.பி.எல்லில் இன்று 6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இரண்டு அணிகளும் முதல் போட்டியில் வெற்றியுடன் தங்களது கணக்கை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் 2 வது வெற்றியை பதிவு செய்வதற்காக இரண்டு அணிகளுமே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல், சர்பராஸ் கான், கருண் நாயர் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். கே.எல் ராகுலும் நல்ல தொடக்கத்தை கொடுத்தால் அணிக்கு கூடுதல் வலு சேர்க்கும். பந்து வீச்சில் அஷ்வின், முஜீப், முகமது சமி, கர்ரன் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.
கொல்கத்தா அணியில் அதிரடி சூறாவளி ஆண்ட்ரே ரஸெல், கிறிஸ் லின், உத்தப்பா, சுப்மன் கில் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். தினேஷ் கார்த்திக்கும் பார்முக்கு திரும்பினால் அணி கூடுதல் வலுவுடன் இருக்கும். பந்து வீச்சில் சுனில் நரேன், குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா ஆகிய சுழல்பந்து வீச்சாளர்கள் எதிரணிக்கு சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் 2வது வெற்றியை ருசித்தே ஆக வேண்டும் என்று களமிறங்குவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.