கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 72 ரன்களுடன் விளையாடி வருகிறது
2019 ஐ.பி.எல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல் 26வது லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் தொடங்கியது. கொல்கத்தா இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் லின்னும், சுப்மன் கில்லும், களமிறங்கினர். முதல் ஓவரில் இஷாந்த் சர்மா வீசிய முதல் பந்தில் கிறிஸ் லின் 0 ரன்னில் போல்ட் ஆகி வெளியேறினார். அதன் பின் வந்த ராபின் உத்தப்பாவும், சுப்மன் கில்லும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர். குறிப்பாக சுப்மன் கில் பவுண்டரியாக விளாசி ரன்களை உயர்த்தினார். அதன் பின் உத்தப்பா 28 (30) ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது நித்திஷ் ராணாவும், கில்லும் விளையாடி வருகின்றனர்.