மேற்கு வங்க மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் வெடி சத்தம் கேட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் பிளகாடா பகுதியில் இன்று காலை பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. இதில் அப்பகுதியில் உள்ள காந்திமார்க் நண்பர்கள் கிளப் இன் மேற்கூரை சேதம் அடைந்தது. இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மிகப்பெரிய அளவில் சத்தம் கேட்டதால் குண்டு வெடித்ததோ என மக்கள் அச்சமடைந்தனர். வெடித்தது குண்டா அல்லது வேறு ஏதேனும் சக்தி வாய்ந்த பொருளா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.