சென்னை அருகே திரைப்பட பாணியில் கொள்ளை, வருமான வரித்துறையினர் போன்று நடித்து வீட்டுக்குள் நுழைந்து, பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர். கடந்தவாரம் நெற்குன்றம், பல்லவன் நகரை சேர்ந்த டோருளா என்பவரது வீட்டுக்கு காரில் வந்த 4 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு,
அவரது வீட்டை சோதனையிட்டனர். அப்போது பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் நகையை எடுத்த அந்த கும்பல் ,அவர்களை தடுத்த டொருளாவை தாக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில், அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசார் இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.