Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் கைவரிசை காட்டிய பெண்கள்… சுதாரித்த மூதாட்டி… பின்னர் நடந்த சம்பவம்….!!

ஓடும் பேருந்தில் இரு பெண்கள் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டி  கிராமத்தைச் சேர்ந்தவர்  பார்வதி(61) . இவர் தனது உறவினர்களுடன் இளையான்குடி அருகே உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அரசு பேருந்தில் சென்றுள்ளார். செங்குளம் பகுதியில் பேருந்து சென்ற போது பேருந்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களில் ஒருவர் பார்வதியின்  கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருட முயன்றுள்ளார். தனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி நழுவுவதை சுதாரித்த பார்வதி சங்கிலியைப் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டுள்ளார்.

இதை கேட்ட அவரது உறவினர்கள் நகையை பறிக்க முயன்ற பெண்ணை அங்கிருந்து தப்பி  செல்லவிடாமல் தடுத்துக் கொண்டனர். நகையை பறித்த பெண்ணுடன் வந்த மற்றொரு பெண்ணையும் சக பயணிகள் பிடித்து வைத்துக் கொண்டனர். உடனே பேருந்து ஓட்டுனர் காவல் நிலையத்திற்கு பேருந்தை ஓட்டிச் சென்றார். நகை பறிக்க முயன்ற பெண்களை காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர் .இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த லட்சுமி மற்றும் அதே பகுதியை சேர்ந்த சாந்தி என்பது தெரியவந்தது. மேலும் கொள்ளை முயற்சி குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இரு பெண்களையும் கைது செய்தனர்.

Categories

Tech |