கொழும்புவில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் லிபர்டி சுற்று வட்டத்தை அடுத்து உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் வணிக வளாகத்தில் உள்ள பொருள்கள் பெரும் சேதம் அடைந்துள்ளன.
வணிக வளாக பகுதியில் இருந்த கடை ஒன்றில் இருந்து தீப்பரவல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.