பிரித்தானியாவில் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தால் உருவாகிய தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
பிரித்தானியாவில் பிர்மிங்ஹாமில் இருக்கும் Tyseley Industrial Estate-ல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தத் தீயை அணைப்பதற்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அங்கிருப்பவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும் West Midlands தீயணைப்பு துறையினர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தீ விபத்து பற்றி Tyseley Industrial Estate பகுதியிலிருந்து எங்களுக்கு தொடர்ந்து பல அழைப்புகள் வந்தன.
அதன் பின்னர் விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். அதனால் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகில் இருக்கின்ற குடியிருப்பாளர்கள் வீட்டில் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்றும் அதனால் யாராவது காயமடைந்திருக்கிறார்களா என்றும் தற்போது வரை தகவல் எதுவும் தெரியவில்லை. யாரும் காயம் அடையவில்லை என்று நம்புகிறோம். அதுமட்டுமன்றி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தற்போதைக்கு வெளியே வரவேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளனர்.
Factory fire in Birmingham #fire #birmingham @ITVCentral @BBCBreaking @bbcmtd @BhamUpdates @birmingham_live @SkyNews #MaviVatan pic.twitter.com/KkyK4LjQ3Q
— AkuranaOnline.com (@akuranaOnlinee) August 10, 2020