கார் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கள்ளூர் பகுதியில் ராஜாமுகமது என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன் நண்பரைப் காண்பதற்காக சகோதரியின் மகள்களான ஷரியபர்சின், அலிசியார்சின் போன்றோருடன் காரில் காட்பாடி சாலை வழியாக கே.வி. குப்பம் நோக்கி சென்றுள்ளார். அப்போது ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகில் கார் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தீப்பற்றி எரிந்ததனால் அதிர்ச்சியடைந்த ராஜாமுகமது காரை நிறுத்தி விட்டு 2 சிறுமிகளுடன் கீழே இறங்கி உயிர் தப்பினார்.
இதனையடுத்து தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் கார் முழுவதும் பயங்கரமாக எரிந்து நாசமானது. அதன்பின் அங்கிருந்த பொக்லைன் எந்திரம் மூலம் தீயை அணைக்க மண்ணை வாரி காரின் மீது கொட்டினர். ஆனால் அதற்குள் விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் அணைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.